போக்கிமேன் கோவுக்கு எதிராக வழக்கு
வெளியான நாளில் இருந்தே லட்சக்கணக்கான மக்கள் விளையாடி வருவதால், மிகப்பெரிய தொகையை வருமானமாக ஈட்டியுள்ளது.
இந்த விளையாட்டு அடிமையான பலரும் நேரம், காலம் தெரியாமல் விளையாடி வருகின்றனர்.
இதனால் ஒரு சில நகரங்களில் விபத்துகளும் ஏற்படவே, 15 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்கிமேன் கோ விளையாட்டில் வழிபாட்டு தலங்களுக்குள் முட்டையை கொண்டு செல்வது போன்ற காட்சி அமைவதாகவும், இது மதத்தினை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும் இந்தியாவின் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அனில் தேவ் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும் இந்த விளையாட்டு பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்த மனு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, விபுல் பன்சோலி ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு கொண்டுவரப்பட உள்ளது.