ஜி20 மாநாட்டில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கிடைத்த அவமானம்
சீனாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை சீனா திட்டமிட்டு அவமானப்படுத்தியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் உள்ள Hangzhou நகரில் துவங்கியுள்ள ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா நேற்று பிற்பகல் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சீனாவை அடைந்தார்.
பொதுவாக, ஜனாதிபதி ஒபாமாவின் தனி விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் கதவுக்கு அருகே நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு அதில் ஒபாமா இறங்கி வருவார்.
ஆனால், சீனாவில் ஒபாமா தரையிறங்கியதும் அவரது விமானத்தில் நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்படவில்லை.
மேலும், விமானத்திலேயே உள்ள சிறிய அளவிலான படிக்கட்டில் ஒபாமா இறங்கி வந்துள்ளார். இந்த சிறிய படிக்கட்டுகளை ஒபாமா அரிதாகவே பயன்படுத்துவார்.
இது மட்டுமில்லாமல், ஒபாமா விமானத்தை விட்டு இறங்கியதும் அவருக்கு சிவப்பு கம்பளி விரிப்பு மரியாதை வழங்கப்படவில்லை.
ஆனால், இன்று காலை சீனாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிவப்பு கம்பளி விரிப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேலும், ஒபாமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு சீனா அதிகாரி ‘இது எங்கள் நாடு….இது எங்களுடைய விமான நிலையம்’ என ஒபாமாவை நோக்கி குரல் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பேசியபோது, ‘இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக தெரியாமல் நடந்திருக்காது. சீனா அதிகாரிகள் இவற்றை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
ஒபாமாவை நடத்திய முறை ஏற்கனவே திட்டமிட்டது போல் உள்ளது’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/69303.html#sthash.2V0HrBLp.dpuf