கிளிநொச்சியில் அதிகரித்த இராணுவ புலனாய்வாளர்கள் – அச்சத்தில் முன்னாள் போராளிகள்!
குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம் பெற்ற வேளையில் முன்னாள் போராளிகள் பலரும் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை மருத்துவ பரிசோதனை நடைபெற்ற கிளிநொச்சி வைத்தியசாலையின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் அதிகளவான இராணுவப் புலனாய்வாளர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்திய சாலைக்கு பல முன்னாள் போராளிகள் பரிசோதனை நிமித்தம் வருகை தந்த போதிலும் இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டம் காரணமாக பெரும்பாலானோர் பரிசோதனையை மேற்கொள்ளாமல் திரும்பியதாகவும் 7பேர் மாத்திரமே பரிசோதனையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள மருத்துவ பரிசோதனைகளின் போது இராணுவ தலையீடுகள் இருக்காதவாறு தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு முன்னாள் போராளிகள் உரிய தரப்பினரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.