ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ மூன்!
இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வ வாயிலைத் தவிர்த்து பின்வாசல் வழியாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும்.
மேலும் ஐ. நா செயலாளரிடம் கையளிக்க இருந்த மகஜர் அவரின் உயர் அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதரவுள்ள நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.