10 லட்சம் போன்களை திரும்ப பெறும் சாம்சங்!
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மொபைல்களுக்கு தனி மவுசு தான், புது அம்சங்களுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் போன்களை அறிமுகப்படுத்தி வந்தது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் Samsung Galaxy Note 7-யை வெளியிட்டது.
இதுவரையிலும் 10 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், திடீரென நிறுவனம் போன்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறுகையில், சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர்.தொடர்ச்சியாக அந்த புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறது.
ஏற்கெனவே இந்த ரக போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த திகதியில் வாங்கியிருந்தாலும் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.