றேமண்ட் சோ ஸ்காபரோ இடைத் தேர்தலில் பாரிய வெற்றி பெற்றார்!
இன்று இடம்பெற்ற ஸ்காபரோ ரூச்ரிவர் இடைத்தேர்தலில் கருத்துக் கணிப்புக்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் றேமண்ட் சோ வெற்றி பெற்றார்.
தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமும், தமிழர்களின் குரலாக எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் செயற்பட்டவர் என்ற நிலையில் தமிழர்களின் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மாகாணத் தலைவராக இவர் திகழ்கின்றார்.
திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தலைமையிலான முன்னேற்றவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட றேமண்ட் சோ லிபரல் மற்றும் என்.டி.பி வேட்பாளர்களை விட அதிகப்படியான வாக்குக்களைப் முன்னணி வகித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த அடிப்படையில் கனடிய ஊடகங்கள் அவர் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளன. பிரகல் திரு இரண்டாவது இடத்தையும், நீதன் சான் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
றேமண்ட் சோ அவர்களை இந்தத் தொகுதிக்கான வேட்பாளராக அறிமுகப்படுத்தியதும் அவருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்குமான தொடர்பாக கனடிய தமிழ்க் கண்சவேட்டிவ் தமிழ் அமைப்பினர் செயற்பட்டிருந்தனர்.
அத்தோடு அடுத்த ஆட்சியை திரு.பற்றிக் பிறவுனின் கட்சியே அமைக்கும் என்ற கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் இந்தக் கட்சிக்கு ஆதரவு தருவது என்பது முக்கியமானது என்றும்,
திரு.பற்றிக் பிறவுன் தமிழர்களின் நண்பனாக இருப்பதனை உறுதிப்படுத்த அவரது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கனடியத் தமிழ் மூத்த ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்ததனர்.