கால்களை இழந்த வீரரின் துடிப்பான கனவு! நிச்சயம் இவருக்கு ஒரு சல்யூட் போடலாம்
7 வயதில் தாயால் கைவிடப்பட்ட அப்துல்லா சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் 2001ம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் அப்துல்லா இரண்டு கால்களையும் முழுமையாக இழந்துள்ளார். பின்னர் அனாதை இல்லத்தில் வளர்ந்த அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டு மீண்டும் ஓடியுள்ளார்.
சிறுவயதில் வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்த அப்துல்லா, தற்போது ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னம்பிக்கை நாயகன் அப்துல்லா(வயது-22) கூறுகையில், விபத்தில் கால்களை இழந்ததை தொடர்ந்து நான் எழுந்து நடப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. என் நிலைமை பற்றி குடும்பத்திற்கு எந்த தகவலும் தெரியாது.
சிறுவயதில் இருந்தே எனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஒரு மோகம் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொள்ளவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பணம் தேவைப்பட்டது.
அதனால், பிச்சை எடுப்பதை விட்டு விட்டு பணிபுரிந்தேன். கால்களை இழந்த நிலையில் தெருவில் தான் முதன் முதலாக கால்பந்து விளையாடினேன்.
Aparajeyo Bangla அமைப்பில் தங்கியிருந்த போது அங்கிருந்த கால்பந்து பயிற்சியாளர் எனக்கு ஊக்கமளித்து பயிற்சி அளித்தார்.
நான் கால் இல்லாமல் விளையாடுவதை பார்த்து மக்கள் வியந்து போனார்கள். பலர் என்னை பாராட்டுவார்கள் அது எனக்கு ஊக்கமளிக்கும்.
தற்போது, நான் என் கனவு நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நிகராக வர வேண்டும் என்ற துடிப்புடனும், கனவுடனும் இருக்கின்றேன். அதற்கான வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன் என கூறியுள்ளார்.
கால் இல்லாமல் தெருவில் விளையாடிய அப்துல்லா, தற்போது வங்கதேசம் தேசிய மைதானத்தில் கால்பந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.