ஜேர்மனி ராணுவத்தில் 64 ஐ.எஸ் தீவிரவாதிகள்?
இதன்பொருட்டு ஜேர்மனியின் ஆட்சிமன்றம் புது மசோதா ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. அதில் இனி புதிதாக ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரர்களின் பின்புலங்களை மிக துல்லியமாக ஆய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனி ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்து 20,000 பேர் விண்ணப்பித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இனிமேல் இதுபோன்று வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவெடுக்க கூடுதல் அதிகாரிகளையும் நியமிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த ராணுவ வீரர்களில் 24 பேர் ஐ.எஸ் ஆதரவு நிலை கொண்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அதில் 19 வீரர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளது. எஞ்சிய 5 பேர் தங்களது சேவை காலத்தின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி ஓய்வு பெற்ற 30 ராணுவ வீரர்கள் ஏற்கனவே சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய திட்டத்தின் வாயிலாக இடதுசாரி மற்றும் வலதுசாரி அடிப்படைவாதிகளையும் ராணுவத்தில் இணைவதை தடுக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள ரகசிய ஆய்வுகள்படி ஜேர்மன் ராணுவத்தில் 64 ஐ.எஸ் ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் 268 பேர் வலதுசாரி அடிப்படைவாதிகள் எனவும், 6 பேர் இடதுசாரி அடிப்படைவாதிகள் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் வாயிலாக நாட்டில் 332 தீவிர ஐ.எஸ் ஆதரவாளர்கள் குடியிருப்பதை உறுதி செய்தனர். தற்போதுள்ள புது பாதுகாப்பு நடவடிக்கைகளால் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.