ஒரு பந்தில் 20 ஓட்டங்கள் அடிக்க முடியுமா? அப்ப இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, ஏனெனில் அதில் சில எதிர்பாரத நிகழ்வுகள் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங் 6 பந்தில் 6 சிக்ஸ்ர் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அது போல 2 பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தது எல்லாம் உண்டு. அது ஏன் ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி ஆனால் அது எடுக்க முடியாமல் ஆட்டங்கள் சம நிலையில் முடிந்ததும் உண்டு.
ஒரு பந்தில் 20 ஓட்டங்கள் எடுக்க முடியுமா என்றால் அனைவரும் அது சாத்தியமில்லை என்று கூறுவோம். ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இப்போட்டி சான்று.
அவுஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 தொடர்கள் நடத்துவது வழக்கம். அது போல தான் Hobart Hurricanes அணிக்கும் MelbourneStars போட்டி நடைபெற்றது.
இதில் வேகப்பந்து வீச்சாளரான மெக்கே முதல் பந்து வீச அதை Hobart Hurricanes சேர்ந்த Travis Brit என்பவர் எதிர்கொண்டார். இதில் முதல் பந்தை அவர் சிக்ஸர் பறக்கவிட்டார். அடுத்த பந்தை வீசிய மெக்கே நோபாலாக வீச அந்த பந்தும் சிக்ஸர் பறந்தது.
சற்று பதட்டத்துடன் அடுத்த பந்தை வீசிய மெக்கே அந்த பந்து நோ பால் ஆக அதையும் சிக்ஸர் அடித்து, தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்து அசத்தினார்.