நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு மரண தண்டனை வழங்கியது வட கொரியா
வடகொரியாவின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் ஹூவாங் மின் மற்றும் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ரி யோங் ஜின் ஆகியோரே, பியாங்யாங் நகரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் வைத்து சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக குறித்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த செய்திக்கு வடகொரியா சார்பில் இதுவரை எந்தவித மறுப்பு அறிக்கையும் வெளியாகாத நிலையில், எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பிலான உண்மை வெளியுலகுக்கு தெரியவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், இதற்கு முன்னரும் கடந்த ஆண்டு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின் மாமா ஜோங் சாங் தாயேக் மற்றும் அந்நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர் ஹியூன் யாங் சோல் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தமை நினைவிருக்கலாம்.