கனடாவின் 2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வரலாற்றியேய மிகவும் வெற்றிகரமானது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த மக்களின் உற்சாகம் வெறும் பேச்சு மட்டுமல்ல.
கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நவ்டீப் பெயின்ஸ் கணக்கெடுப்பின் ஒட்டுமொத்த பதிலளிப்பு விகிதம் 98.4சதவிகிதமென திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கனடியர்கள் 2016 கணக்கெடுப்பில் தங்கள் பங்களிப்பு குறித்து பெருமைகொள்ளலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களின் சிறந்த ஆதரவு கனடா புள்ளிவிபரவியல் கனடிய வரலாற்றில் மிக வெற்றிகரமான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறைவேற்ற உதவியதெனவும் கூறியுள்ளார்.
லிபரல் கடந்த வருடம் பதவிக்கு வந்த சிறிது காலத்தில் புதுப்பித்த கட்டாய நீண்டவடிவ மக்கள் தொகை கணக்கெடுப்பு 97.8சதவிகித பதிலளிப்பை காட்டியுள்ளது.
இந்த ஆய்வுகளின் முடிவு 6-மாதங்களிற்குள் வெளியிடப்படும்.
1966ன் பின்னர் இடம்பெற்ற மிக வெற்றிகரமான கணக்கெடுப்பு இதுவாகும்.