வாகனம் TTC பேரூந்தின் பின்புறத்தில் மோதி ஒருவர் மரணம் இருவர் காயம்.
கனடா-ரொறொன்ரோ. வார்டன் மற்றும் விஞ்சில் வாகனம் ஒன்று TTC பேரூந்து ஒன்றுடன் மோதிய விபத்தில் மனிதனொருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.வார்டன் மற்றும் விஞ்ச் அவெனியுவில் L’Amoreaux ல் காலை 6.30-மணியளவில் விபத்து நடந்துள்ளது.
26-வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் நாடித்துடிப்பெதுவும் அற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் காயங்கள் காரணமாக இறந்து விட்டதாகவும் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு ஆண் ஒரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ஆனால் பேரூந்தில் இருந்தவர்கள் எவரும் காயமடையவில்லை என மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.
விபத்து நடந்த சமயம் பேரூந்து நிறுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளதென தான் நம்புவதாக TTC பேச்சாளர் பிராட் றொஸ் கூறியுள்ளார்.
இளம் நபர் ஒருவர் சோகமான முறையில் கொல்லப்பட்டமைக்காக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் றொஸ் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் ஆசன பட்டிகள் அணிந்திருந்தனரா இல்லையா என்பது குறித்த விசாரனைகள் இடம்பெறுகின்றது.