ஒன்ராறியோ மாகாண ருச் ரிவர் இடைத்தேர்தல்! வாக்குறுதியில் பின்வாங்கினார் பற்றிக் பிறவுண்!
ருச் ரிவர் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தான் வழங்கிய முக்கிய வாக்குறுதி ஒன்றில் இருந்து பின் வாஙகினார் பழமைவாதக்கட்சித் தலைவர் பற்றிக் பிறவுன்.
ரூச் ரிவர் வாக்காளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பற்றிக் பிறவுன் எழுதிய கடிதம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஒன்ராறியோவில் தற்போதைய அரசால் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலியல்கல்வி பாடத்திட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
தற்போது அவ்வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி, அவ்வாறு வாக்குறுதி வழங்கியது தவறு என்றும் திருத்தியமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளாh
தவறான வா க்குறுதியை வழங்கியமைக்கு மன்னிப்பு கோரிய அவர் இதனால் இடைத்தேர்தலில் ஏற்படக்கூடிய எந்தவித பின்விளைவுகளையும் எதிர் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ரூச் ரிவர் தமிழ் வாக்காளர்கள் சிலர் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தவறிய தவறையும் திரு பற்றிக் பிறவுன் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்களை தொடர்ந்தும் அணிசேர்த்து வைத்திருக்க அவருக்கு உதவியாக இருக்கும் என்றனர்.