பிரபல அரசியல் கட்சியில் நயன்தாரா- வெளிவந்த ரகசியம்
நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை. இந்நிலையில் இவர் தயாரிப்பாளராகவும் மாறவிருக்கிறார்.
இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். மேலும், இவருக்கு சமீப காலமாக அரசியலிலும் சத்தமில்லாமல் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் ஆளுங்கட்சி சார்பில் நடத்திய ஒரு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் விழாவில் கலந்துக்கொண்டார்.
நயன்தாரா தான் நடித்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதே கட்சியில் இவர் இணையவும் வாய்ப்பு இருக்கின்றது.