ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் ‘உலகின் மிக அகலமான’ தொங்கு பாலம் திறப்பு!
ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய ‘உலகின் மிக அகலமான’ தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.
புதிய தொங்கு பாலத்தை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் நேற்று முன்தினம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார்.
இந்தப் பாலத்துக்கு 16-ம் நூற்றாண்டை சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலிம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையே வர்த்தகம் மேம்படும் என்று ஜனாதிபதி எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
ரூ.20,100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
8 வழிச் சாலைகள், 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை, ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.