வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் LG
கைப்பேசி உலகிற்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது புத்தம் புதிய ஸமார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
LG V20 எனும் இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32/64 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 21 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 4,000 mAH மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் கூகுளின் புதிய இயங்குதளமான Android 7.0 Nougat இயங்குதளத்தினைக் கொண்டு செயற்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இக்கைப்பேசியானது அடுத்த மாதம் பெர்லினில் இடம்பெறவுள்ள 2016ம் ஆண்டிற்கான IFA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.