புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானிய ஏற்க வேண்டும்: பிரான்ஸ் முன்னால் பிரதமர்
சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தஞ்சம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதில், பெரும்பாலானவர்களின் குறிக்கோள் பிரித்தானியாவிற்கு செல்வதாகவே உள்ளது. எனவே பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் அமைந்துள்ள Channel எனும் சுரங்கப்பாதையின் வழியாக டிரக் வண்டியில் பயணித்து செல்கின்றனர்.
இவ்வாறு, சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் குடியேறும் இவர்களை, அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சகம் தடுத்துள்ளது, இதன் காரணமாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் சிக்கிகொள்ளும் இவர்கள், பிரான்சின் எல்லையில் அமைந்துள்ள காலிஸ் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, புகலிடக்கோரிக்கையாளர்களை பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பிரான்ஸ் அரசாங்கத்தை சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பொருளாதார சிக்கல் மற்றும் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதுகுறித்து பிரான்சின் முன்னால் ஜனாதிபதி Nicolas Sarkozy கூறியதாவது, காலிஸ் முகாமினை பிரித்தானியாவிற்குள் நகர்த்தவேண்டும். ஏனெனில், பிரித்தானியாவுக்குள் நுழைய வேண்டும் என எதிர்பார்ப்பதோடு வரும் அவர்களுக்கு பாதை மறுக்கப்படுவதால், பிரான்சில் முடங்கிவிடுகின்றனர்.
இதனால், இந்த முகாம் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது கிடையாது, இது உங்களுக்கு சொந்தமானது, மேலும் புகலிடக்கோரிக்கையாளர்களை சமாளிக்கும் பொருட்டு, பிரித்தானியா கண்டிப்பான முறையில் புகலிடக்கோரிக்கையாளர்களை மையத்தை திறக்க வேண்டும்.
கடந்த 2 வருடங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான குடியேறிகள், Channel சுரங்கப்பாதையை பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரச்சனையில் பிரித்தானியா கண்டிப்பான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய விலகியது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவை இரண்டும் சேர்ந்து தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.