இலங்கையில் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை நேரில் பார்வையிடும் பான்கீமூன்!
இலங்கைக்கு 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31ம் திகதி வருகைதரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பாரியளவிலான மாற்றங்களை அவருடைய கண்களாலேயே பார்ப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் நேற்றய தினம் வலி,வடக்கில் காணி இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளையும், வீட்டுதிட்டத்தையும் பார்வையிட்டதுடன், மல்லாகம்- கோணப்புலம் நலன்புரி நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போதே பான்கீமூனின் இலங்கைக்கான விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம்- காலி ஆகிய பகுதிகளுக்கும் நாம் அவரை அழைத்துச் செல்வதன் ஊடாக வடக்கு, தெற்கு மாகாணங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளையும் அவருக்கு காண்பிக்க உள்ளோம்.
மேலும், கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நியூயோர்க் பகுதியில் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்திருந்தபோது விடுத்திருந்த அழைப்பினை தொடர்ந்தே செயலாளர் நாயகம் 2 நாள் விஜயமாக இலங்கை வருகின்றார்.
விசேடமாக இலங்கைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை அவர் தன்னுடைய கண்களாலேயே பார்த்து கொள்ள முடியும்.
மேலும் யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் காலிக்கும் அவரை நாம் அழைத்துச் செல்வதன் ஊடாக வடக்கு, தெற்கு மாகாணங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் அவருக்கு நாங்கள் காண்பிக்க போவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.