விஷால், காஜல், ஹன்சிகா, ஜி.வி.பிரகாஷ் என அனைவரையும் கலாய்த்து தள்ளிய கவுண்டமணி
இதில் ஒரு காட்சியில் காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானிக்கு கேரவன் வேண்டும் என ஒருவர் கேட்க, ஏண்டா ஜாதிய ஒழிக்கனும்ன்னு தான் எல்லோரும் போராடிக்கிட்டு இருக்கோம், இவுங்க அகர்வால், மோத்வானினு ஜாதி பேரோட நடிக்கிறாங்க, அவுங்களுக்கு தான் கேரவன் கிடையாது என்று கூறுவார்.
இதுமட்டுமில்லாமல் விஷாலுக்கு கேரவன் வேண்டும் என கேட்க, பின்னி மில்லுக்கு அனுப்பு அங்க தான் பைட் சீன் எடுப்பாங்க என கூறி கலாய்த்து விடுகிறார்.
இதெல்லாம் விட ஒரு காட்சியில் ஜி.வி,பிரகாஷ் நடிக்க வந்துவிட்டார் என கூற, நாட்ல என்னடா நடக்குது, சினிமா எங்கடா போகுது என செம்ம கலாய் கலாய்க்கிறார்.