தமிழ் பட ரீமேக்கில் நடிக்கிறாரா அமீர் கான்?
பாலிவுட்டின் டாப் ஹீரோகளில் ஒருவர் அமீர் கான். இவர் தற்போது ஒரு தமிழ் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கபடுகிறது.
ராஜு முருகனின் ஜோக்கர் படம் சமூக அவலங்களை தைரியமாக எடுத்துக்கூறியதால் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஹிந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஜோக்கர் படத்தை, தமிழ் சினிமாவின் பிகே என பலர் கருத்து தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.