திருமண நிகழ்ச்சியின் போது ஐ.எஸ் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி, 100 பேர் காயம்
சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவர் உடலில் கட்டிவந்த வெடுகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை அடுத்து ஏராளமான அவசர ஊர்திகள் அந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த மாகாண ஆளுநர், இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என கூறியுள்ளார். ஆனால் இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்று அறிக்கை வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த பகுதிக்கு 100க்கும் அதிகமான மீட்பு குழுவினரை அனுப்பியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.