இரண்டு விண்வெளி வீரர் பதவி வெற்றிடத்திற்கு கிட்டத்தட்ட 4,000 விண்ணப்பங்கள்.
ஒட்டாவா-வரவிருக்கும் விண்வெளி வீரர் பதவிகள் இரண்டிற்கு 4,000விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக கனடிய விண்வெளி ஏஜன்சி தெரிவித்துள்ளது.
கடந்த யூன் மாதம் ஏஜன்சி அதன் நான்காவது ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.அடுத்த கனடிய விண்வெளி பயணத்திற்கு இருவர் தேவைப்படுகின்றனர் என அறிவிக்கப்பட்டது
விண்ணப்பங்கள் மூடப்பட்ட கடந்த வாரம் ஏஜன்சி 3,772 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இந்த விண்ணப்பங்களில் 69சதவிகிதம் ஆண்கள்.24சதவிகிதம் பெண்கள்.மிகுதி 7சதவிகிதம் தங்கள் இனத்தை தெரிவிக்கவில்லை.
அடுத்த கோடை காலத்தில் இடம்பெறும் இறுதி தேர்வில் தெரிவாகும் இருவரும் தங்கள் பயிற்சியை நாசாவுடன் தொடங்குவர்.
1983லிருந்து கனடா 12விண்வெளி வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர்கள் 16 விண்வெளி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.