பிரேசில் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது, இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர்கள் சென்றனர்.
இவர்களில் நான்கு பேர் கடந்த 14ம் திகதி, பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறையை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கு பணத்தை செலுத்துவிட்டு வந்தவர்கள், தங்களை சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலிசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பொய் சொன்னது தெரியவந்தது.
போலியான புகார் தெரிவித்து, தங்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பிரேசில் நாட்டு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தங்கள் நாட்டு வீரர்களின் செயலுக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.
இவர்களில் இரு நீச்சல் வீரர்களான கன்னர் பென்ட்ஸ்(Gunnar Bentz)மற்றும் ஜாக் கோங்கர்(Jack Conger)பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின் ரியோவை விட்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
James Feigen என்பவர் ரியோவில் தங்கி உள்ளார், நான்காவது நீச்சல் வீரரான ரையன் லோக்டி(Ryan Lochte) அமெரிக்காவுக்கு ஏற்கனவே திரும்பிவிட்டார், ரியோ ஒலிம்பிக்கில் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.