தெறி நைனிகா சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வருகிறார் தெரியுமா?
தெறி படத்தில் விஜய்க்கு பிறகு நம் மனதை கொள்ளை கொண்டவர் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகளும் கூட. நைனிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது மீனா மற்றும் நைனிகா இருவரும் விஜய் டிவியில் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி விரைவில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவுள்ளனர். நைனிகா முதன் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.