நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா.
வன்கூவர்- கனடாவிற்கு அதிக அளவிலான புதிய குடிவரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என கனடாவின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு அமைச்சர் அண்மையில் சீனா விஜயம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார்.அங்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனாவிற்கான விசா விண்ணப்பங்களை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்து அதிக அளவிலான சீன மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் உல்லாச பயணிகளிற்கு கனடாவின் கதவை திறக்க அதிகாரிகளின் ஆதரவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கனடா பூராகவும் பல ஆலோசனைகளை நடாத்தியுள்ளார்.வன்கூவரில் வர்த்தக தலைவர்களுடன் நடாத்திய வட்டமேசை மாநாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இளைய தலைமுறையினர் விசேடமாக பெரிய நகரங்களிற்கு வெளியே தேவை என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் குடிவரவாளர்களை சமஅளவில் விரிவு படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார் ரொறொன்ரோ அல்லது வன்கூவரிற்கு விரும்புவதாகவும் தாங்கள் கடைசியாக விரும்பும் ஒரு விடயம் ஒவ்வொரு குடிவரவாளர்களும் ஒன்றில் ரொறொன்ரோ அல்லது வன்கூவர் செல்வரை தாங்கள் விரும்புவதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செப்ரம்பர் மாதம் G20 உச்சி மாநாட்டிற்காக சீனா செல்வதற்கு சற்று முன்னராக குடிவரவு அமைச்சரின் பீஜிங் விடயம் மேற்கொள்ளப்பட்டது.
எவ்வளவு குடிவரவாளர்களை ஏற்பது குறித்து முடிவாகவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.செப்ரம்பரில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அட்லான்டிக் கனடா புது வரவாளர்களை ஈர்க்கும் ஒரு முன்னோடி திட்டமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.