முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் வருகை
முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் ஐந்து அமெரிக்க விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளனர்.
வட மாகாணசபையின் கோரிக்கைக்கு அமைய இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த அமெரிக்க மருத்துவர்களின் இலங்கை விஜயத்திற்கான செலவுகளை வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி போராளிகளுக்கு விச ஊசி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து துரித கதியில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் மாகாணசபையில் கோரியுள்ளார்.
இதன்போது இது பற்றி குழப்பமடையத் தேவையில்லை எனவும் ஏற்கனவே அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை விஜயம் செய்துள்ளதாகவும் அவர்கள் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.