இனி திரும்பமாட்டேன்: பெல்ப்ஸ் திட்டவட்ட முடிவு
அமெரிக்க நீச்சல் வீரரான பெல்ப்ஸ் இனி நீச்சல் குளம் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரபல நீச்சல் வீரரான பெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2002 ஆம் ஆண்டு 15 வயதில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் பெல்ப்ஸ், இது வரை 23 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்று 5 தங்கம் 1 வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
தற்போது ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் நீச்சல் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார், அதன் பின் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். அதனால் அவர் மீண்டும் நீச்சல் உலகிற்கு திரும்புவார் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பெல்ப்ஸ் கூறியதாவது, இனி நான் நீச்சல் குளம் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியை விட, ரியோ ஒலிம்பிக்கில் தான் அதிகமாக பேசபட்டேன். ஆகவே போதும் போதும் என கூறும் அளவிற்கு சாதனைகள் நிகழ்த்திவிட்டேன்.
எனது ஓய்வில் உறுதியாக இருக்கிறேன், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக பெல்ப்ஸ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெல்ப்ஸ்சிற்கு தற்போது தான் மகன் பிறந்துள்ளார். அவரது தாயார் மற்றும் மனைவி இருவரும் ரியோ ஒலிம்பிக்கில் பெல்பஸ் பங்குபெற்ற இறுதி போட்டியை கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது