தயா மாஸ்டர் வடமாகாணத்தை விட்டு வெளியேறத் தடை
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் தயா மாஸ்டரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 4 சரீரப் பிணைகளிலும் விடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வடக்கு மாகாணத்தை விட்டு வெளியில் செல்ல தடைவிதித்துள்ளார்.
கடந்த முறை நடந்த வழக்கு விசாரணையின் போது, தயா மாஸ்டருக்கு பிணை வழங்கியிருந்தது. எனினும் நான்கு அரச அதிகாரிகள் சரீரப் பிணை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போனதன் காரணமாக அவர் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டமையினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.