பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட் – கண்டியில் சம்பவம்
கண்டி நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஆடை தொகையில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரபாகரனின் படத்துடன் தமிழீழ நாட்டின் வரைப்படமும் அந்த டீ சேர்ட்டில் அச்சிடப்பட்டிருந்ததாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்காக கொள்வனவு செய்த ஆடைகள் அடங்கிய பொதியை திறந்து பார்த்த போது இந்த டீ சேர்ட் அதில் இருந்துள்ளது.
இதனையடுத்து விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆடைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.