கல்கரியில் மீண்டும் கன மழை
கல்கரி நகரில் நேற்று (திங்கட்கிழமை) கனமழை பெய்தமையினால் அங்கு பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்குள்ள பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கல்கரியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக நேற்று பிற்பகலில் பல பகுதிகளிலும் நீர் நிறைய ஆரம்பித்துள்ளது. அதேவேளையில் நகரின் சில பகுதிகள் உட்பட அதிக இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால் வீடுகள், கட்டடங்கள், வீதிகள் என பல இடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
தற்பொழுது கல்கரியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் அதேவேளை, பலத்த காற்றும் வீசுகின்றமையினால் மக்கள் எச்சரிக்கையாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும் என்று சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.