பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்
வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டுள்ளார். இது அம்மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
அப்பகுதியில் Tla-o-qui-aht எனப்படும் பழங்குடியின மக்கள் 618 பேரே மொத்தமாக வாழ்கின்றனர். கனடாவின் எல்லைக்குள் இருந்தாலும் தமது பிரதேசத்தை அவர்கள் தனி தேசமாகவே கனிக்கின்றனர். இந்நிலையில் தமது இனத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அவர்கள் தமது பிரதேசத்தில் வருடாவருடன் ஒரு பேரணியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற குறித்த பேரணியின் ஆரம்ப நிகழ்விலேயே பிரதமர் ஜஸ்டின் கலந்கொண்டார். ஜஸ்டின் மற்றும் அரவது குடும்பத்தினர் தற்பொழுது வான்கூவர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பேரிணியல் கலந்துகொண்டமை, அப் பழங்குடியின மக்களை பெரிதும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இது குறித்து அவர்களது தேசத்தின் முதல்வர் கருத்து தெரிவிக்கும்பொழுது, ‘கனேடியப் பிரதமர் வான்கூவர் பகுதியில் விடுமுறையைக் கழிக் வந்துள்ளார். எனவே, எமது பேரணியில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அதனை ஏற்று இதில் அவர் கலந்துகொண்டமையானது, எம் அனைவரும் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்தார்.