ரியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த சுவிஸ்
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதன் முறையாக சுவிட்சர்லாந்து இடம் பிடித்துள்ளது.
பிரேசிலின் ரியோ நகரில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டிகள். இதில் சுவிட்சர்லாந்தின் துர்காவ் பகுதியை சேர்ந்த 47 வயதான Heidi Diethelm Gerber துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெங்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
சீனாவின் ஸாங் ஜியான் ஜியான் என்பவரை 8-கு 4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ஹைதி இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். தகுதி சுற்று போட்டியில் 8 பேரில் ஏழாவது இடத்தை தக்கவைத்துக் கொண்ட ஹைதி, அடுத்துள்ள சுற்றுகளில் சுதாரித்துக் கொண்டு போட்டியிட்டுள்ளார்.
அரையிறுதியில் அபாரமாக போட்டொயிட்ட ஹைதி 4-வது இடத்தை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-வது இடம் பிடித்த ஹைதி வெங்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரையான ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் முதன் முறையாக சுவிஸ் பெண்மணி ஒருவர் பதக்கம் வென்றுள்ளது நினைகொள்ளத்தக்கது.
ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை குறிப்பிட்ட பிரிவில் 20 பதக்கங்களை சுவிஸ் ஆடவர் அணி கைப்பற்றியுள்ளது.
Obwalden பகுதியை சேர்ந்த Michel Ansermet என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.
சுவிஸ் சார்பாக ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக 105 தடகள வீரர் வீராங்கணைகளை அனுப்பியுள்ளது. ஒட்டுமொத்தமாக குறைந்தது 5 பதக்கங்களையாவது சுவிஸ் வீரர்கள் வென்று வருவார்கள் என தேசிய ஒலிம்பிக் செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.