பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்
உடல் நலக் குறைவால் பிரபல தயாரிப்பாளார் பஞ்சு அருணாச்சலம் அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் பஞ்சு அருணாச்சலம் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனது 71 வயதை எட்டிய நிலையில் உடல் நலக் குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை தனது இல்லத்தில் வைத்து பஞ்சு அருணாச்சலம் காலமானார்.
பஞ்சு அருணாசலம் கண்ணதாசனின் உதவியாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் மற்றூம் இயக்குனர் என பல வேடங்களில் வெள்ளித் திரையில் திறமையை பதித்தவர்.
மேலும், இசைஞானி இளையராஜாவை 1976 ஆம் ஆண்டு அண்ணக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரே. இது மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் படங்களை அதிகளவில் தயாரித்துள்ளார்.