பங்களாதேஷ் தாக்குதல்: ரொறன்ரோ பல்கலைகழக மாணவன் கைது
பங்களாதேஷில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரொறன்ரோ பல்கலைகழக மாணவன் ஒருவரும், பிரித்தானிய பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரொறன்ரோ மாணவன் 22 வயதுடையவர் என டாக்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பங்களாதேஷில் கடந்த ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொறன்ரோ மாணவனை மீட்பது தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.