வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட்: இந்தியாவில் முதன்முறையாக ஆடுகிறது வங்கதேசம்
வங்கதேச கிரிக்கெட் அணி தனது 30 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியானது இந்த மாதம் ஆகஸ்ட் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது.
இந்திய அணி 2016-17ம் ஆண்டில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒரு டெஸ்ட் போட்டியானது அடுத்த வருடம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி இந்த டெஸ்ட் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
NEWS: #TeamIndia to play a one-off Test match against@BCBtigers from Feb 08-12, 2017 in Hyderabad #INDvBAN