2018ம் ஆண்டின் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் ’96’. அறிமுக இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் முதல் முறையாக சேர்ந்து நடித்த இந்தப் படத்தை தமிழ் வெளியீட்டிற்கு முன்பே தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார்கள்.
தெலுங்கில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க, த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்கள். தமிழ்ப் படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கிலும் இயக்குகிறார்.
ஆனால், தமிழுக்கு இசையமைத்த கோவிந்த வசந்தாவை தெலுங்கிலும் இசையமைக்க வைக்க படத்தின் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அவருக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பின்னர் இயக்குனர் பிரேம்குமார் அவர் பிடியில் உறுதியாக இருக்க கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது பாடல் பதிவு ஆரம்பமாகி உள்ளதாம்.