எந்தவகையிலும் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு அழைப்பு விடுக்குமாறு சகல தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். நேற்று (25) தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 93 உள்ளுராட்சி சபைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் ஏற்கப்படவுள்ளன.
சகல தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலை ஒத்திப் போட்டு வருவது ஜனநாயக விரோத செயல் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.