9 வயது சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பொலிஸார்!
TTC பேரூந்து ஒன்றினுள் தனியாக பயணம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட, 9 வயது மதிக்கதக்க சிறுமியின் பெற்றோரை கண்டறிய, பொலிஸார் மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.
ரொறொன்ரோவின் நகர மையத்தில், யங் மற்றும் அடெலெயிட் வீதியில் அதிகாலை 3.20 மணியளவில் குறித்த சிறுமி, அருகாமையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பார்ப்பதற்கு சிறிய தோற்றமுடையவளாக இருப்பதால் சந்தேகமடைந்த சக பயணி, சாரதியின் உதவியுடன் பொலிஸாரை வரவழைத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். ஆனால் சிறுமியின் அடையாளங்கள் எதனையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் குறித்த சிறுமியை அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் உதவி சங்கத்துடன் இணைந்து பொலிஸாரும் முயற்சி செய்துவருகின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/67650.html#sthash.7vT45ebW.dpuf