கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
வவுனியா- கனகராயன் குளத்திலிருந்து காரொன்றில் கஞ்சா கடத்தப்பட்டது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினர் மேற்கொண்டன நடவடிக்கையில் சந்தேநகபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 கிலோ 732 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, ரொட்டவெவ மற்றும், மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.