8 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை அணி
கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு இப்போட்டியும் ஒரு சான்று தான்.
1995 ஆம் ஆண்டுகளில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்த அணிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியும் உண்டு. இவர்கள் மோதும் போட்டி என்றால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
அது போல தான் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி 1999 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 195 ஒட்டங்களுக்குள் சுருண்டது.
அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 36 ஓவர் முடிவில் 157/1 என வலுவான நிலையில் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் 194 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகள் சரிந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் 9 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் என்ற போது அசார் வீசிய பந்தை முரளிதரன் ஒரு ஓட்டம் எடுக்க, ஆட்டம் சமநிலையானது.
இரண்டு விக்கெட்டுகள் மீதம் உள்ள நிலையில் 1 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்கின்ற போது, அடுத்த பந்தை எதிர் கொண்ட சில்வா தவற விட, அதற்கு அடுத்த பந்தில் முரளிதரன் ரன் அவுட்டானார்.
வெற்றி இலங்கை பக்கம் இருந்தது சற்று மாறத்தொடங்கியது, அதே போல அடுத்த ஓவரை வீசிய அப்துல் ரசாக் பந்து வீச்சில் இலங்கை வீரர் போல்டாக ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் முடிவை கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர்.