7,500 மீட்டருக்கு மேலான உயரத்திலிருந்து குறித்து சாதனை
பாரசூட் அணியாமல் 7,500 மீட்டருக்கு மேலான உயரத்தில் இருந்து குதித்து அமெரிக்க வான் குதிப்பு வீரர் லூக் அய்கின்ஸ் சாதனை
பாரசூட் (வான்குடை) பயன்படுத்தாமல், 7,500 மீட்டருக்கு மேலான உயரத்தில் இருந்து குதித்திருக்கும் முதல் நபர் என்ற சாதனையை அமெரிக்கவின் வான் குதிப்பு வீரர் ஒருவர் படைத்திருக்கிறார்.
கலிஃபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் லூக் அய்கின்ஸ் என்பவர் இந்த சாதனை பதிவை நிகழ்த்தி இருக்கிறார்.
மேலே குதித்த நேரத்திலிருந்து, கீழே வந்தடைவது வரை இரண்டு நிமிடம் ஆகியிருக்கிறது அதிக உயரம் ஆனதால் ஆக்ஸிஜன் சுவாசிக்கும் முகமூடியை அணிந்தவராய் அவர் குதித்தார்.
குதித்த நேரத்திலிருந்து கீழே தரைக்கு மேலே 60 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டிருந்ததாக வலையின் மேல் அவர் பின்புறம் படும் வகையில் விழுவது வரை இரண்டு நிமிடம் ஆகியுள்ளது.
26 ஆண்டுகளாக வானிலிருந்து குதிக்கும் சாகச வீரராக இருக்கும் அய்கின்ஸ், 18,000 முறை வானிலிருந்து குதித்திருக்கிறார்
.