68-வருட ரொறொன்ரோவின் தள்ளுபடி முத்திரை சின்னம் மூடப்படுகின்றது.
ரொறொன்ரோ வரலாற்றின் ஒரு முத்திரை சின்ன அத்தியாயமாக விளங்கிய Honest Ed’s,— 68வருடங்களின் பின்னர் முடிவிற்கு வந்துள்ளது. இறுதி தடவையாக சனிக்கிழமை மூடப்படும்.
அடிமட்ட விலை, வெளிப்படையான நியோன் விளக்குகளை கொண்ட குறிகள் என்பன கொண்டு நன்கு அறியப்பட்ட ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லாக வளர்ச்சியடைந்தது.
1988ல் நகரின் வசதி குறைந்தவர்களிற்கு இலவச வான்கோழி வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. வருடந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வான்கோழிகள் வழங்கப்பட்டன.