பல்கலைகழங்களுக்கான டி-20 போட்டியில், 19 வயதான ருத்ரா, 67 பந்தில் 200 ஓட்டங்கள் விளாசி அரிய சாதனை படைத்துள்ளார்.
மும்பையில் ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் போட்டி போட்டு சிக்சர் மழை பொழிய, 40 ஓவரில் ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் 460 ஓட்டங்கள் குவித்தன.
இந்த சிக்சர் மழை பொழிந்த அதே நேரத்தில், மும்பையில் பல்கலைகழங்களுக்கு இடையேயான டி-20 போட்டியில் மும்பையைசேர்ந்த 19 வயது வீரர் ருத்ரா, 67 பந்தில் 200 ஓட்டங்கள் குவித்து சாதித்துள்ளார்.
ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 15 சிக்சர்கள், 21 பவுண்டரிகள் விளாசி இரட்டை சதம் எட்டினார்.
இருப்பினும் இவரால் உலக சாதனையை எட்ட முடியவில்லை. கடந்த 2007ல் இலங்கையில் தானுகா பதிரானா (277 ஓட்டங்கள், 72 பந்துகள்) ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.