பிரான்சின் புதிய ஜனாதிபதியாக லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி தலைவர் லீ பென்னை வீழ்த்தியுள்ளார்.
இதில் மேக்ரான் 65.8 சதவீத வாக்குகளும், மரின் லீ பென் 34.2 சதவீத வாக்குகளும் பெற்றனர். 39 வயதான மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதி வரலாற்றில் குறைந்த வயதில் ஜனாதிபதி ஆனவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியான மேக்ரான் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேக்ரான் மனைவி பெயர் Brigitte Trogneux. இவர் மேக்ரானை விட 24 வயது மூத்தவர்.
Brigitte Trogneux நாடக ஆசிரியரான இவர் 1953-ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள amiens-ல் பிறந்துள்ளார். 1992-ஆம் ஆண்டு இம்மானுவேல் மேக்ரான் Brigitte Trogneux-ஐ ஒரு தனியார் பள்ளியில் சந்தித்துள்ளார்.
Trogneux-க்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். Trogneux-ன் மூத்த மகளும், இம்மானு வேல் மேக்ரானும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர்.
Trogneux ஒரு நாடக ஆசிரியர் என்பதால், நாடக வகுப்பில் மேக்ரான் சேர்ந்துள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கு மேக்ரானின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மேக்ரானை பாரிசில் உள்ள பள்ளியில் படிப்பதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்த போதிலும் இருவரும் போனில் பேசியபடி இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் Trogneux தனது கணவரை விட்டு பிரிந்து பாரிசிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் பல தடைகளை கடந்து 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். மூன்று குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையானார் மேக்ரான்.
மேக்ரான் தன்னை விடவும் 24 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதுடன், தற்போது குறைந்த வயதுடைய ஜனாதிபதியாக பொறுப்பேற்று பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் புதிய தடம் பதித்துள்ளார்.
இதே வேளையில் இவருடைய ஆட்சியில் தன்னுடைய மனைவியான Trogneux-க்கு கல்வி அமைச்சர் பதவியை அவர் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.