மாறுபட்ட சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு
கனடாவில் மாறுபட்ட சிந்தனை கொண்ட துடிப்பான இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் தங்களது மாறுபட்ட சிந்தனையை முன்வைக்கும் திறமைசாலி இளைஞர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
கனடாவின் முன்னணி நிறுவங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த சிறப்பு நிகழ்வினை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் பங்குபெறும் இளைஞர்கள் வழங்கப்படும் குறிப்பிட்ட கால அளவில் தங்களது மாறுபட்ட சிந்தனையை விளக்க வேண்டும்.
இதில் வெற்றி பெறும் இளைஞருக்கு முதல் பரிசாக 2500 டொலர் பரிசும், இரண்டாவது இடத்தை பிடிப்பவருக்கு 1500 டொலரும், 3-வது பரிசாக 1000 டொலரும் வழங்கப்பட உள்ளது.
மேலும் 3 சிறப்பு பரிசுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட உள்ளது. காலை 9 மணி தொடங்கி நடக்கவிருக்கும் இந்த நிகழ்வானது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்ட அனைவரும் கட்டாயம் பங்குபெற வேண்டிய ஒன்றாகும்.
இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக நாளையை தொழில் முனைவோரை ஊக்குவித்துவரும் நான்கு முக்கிய நபர்களை தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள், Nisha Saravanan (CEO & Founder of Ambience Data), Vejey Gandier (Co-Founder of PopRx & Meclinx), Balinder Rai (Bussines Development Manager, OCE), Lucas Chang (Lead Organizer, Startup York Region Co-Founder, Y2(Youth For Youth) ஆகியோர்கள் சிறப்பு தேர்வுக்குழுவினராக கலந்துகொள்ள உள்ளனர்.
இப்படி அடுத்த தலை முறையினரை வளர்ப்பதற்காக நடைபெறும் நிகழ்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் லங்காசிறி அனுசரணை வழங்குவதில் பெருமை அடைகிறது. உங்களுடைய நிகழ்விற்கும் ஊடக அனுசரணை வேண்டுமெனில் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு எழுதவும்.