28/06/2017 அன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இனால் ஆரம்பிக்கப்பட்ட கஞ்சிகுடியாறின் நீர் கொள்திறனை 6.29 மில்லியன் கன மீற்றரில் இருந்து 8.26 மில்லியன் கன மீற்றராக அதிகரிப்பதன் மூலம் 1700 ஏக்கர் விவசாய நிலத்தினை இரு போகங்கள் செய்யக்கூடிய விதமாக மாற்றியமைப்பதற்காக 61.7 மில்லியன் ருபாய்கள் ஒதுக்கப்பட்டது (6.17 கோடி),
ஆனால் இப் புனரமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக திறப்பு விழா வைத்து இரு வார காலத்திற்குள் இக் குளக்கட்டு வெடித்துள்ளது ,
இத்திறப்பு விழாவில் சென்ற வாரம் கலந்து சிறப்பித்து பொன்னாடைகளை பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி எஸ்.திலகராஜா, அம்பாறை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசார், தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி டீ.தவராஜா, நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை நீர்ப்பாசனப் பொறியியலாளர்களான எந்திரி ஜீ. சுஜிதரன், எந்திரி எஸ்.சுபாகரன், அம்பாறை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையின் பொறியலாளர் எந்திரி வை.பீ.ரஸ்மி, கஞ்சிகுடிச்சாறு குளப்பகுதி தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆர்.ராஜஸ்வரன், மண் பரிசோதகர் இமாமுடீன் ஆகியோர் இதற்கு பதில் கூறவேண்டும் என முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார்
இன்னும் மழை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் இன்னும் குளக்கட்டு வெடிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .