6 பந்துகளுக்கு 100 ஓட்டங்கள் எடுக்க முடியுமா? அசத்திய இலங்கை வீரர் சங்ககாரா!
கிரிக்கெட்டில் எதுவெல்லாம் நடக்காது என்று நினைக்கிறோமோ அதுவெல்லாம் அசாதாரணமாக தற்போது நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக ஆறுபந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை, அதையும் நிரூபித்தார்கள் இந்திய அணியைச் சேர்ந்த யுவராஜ் சிங்கும், தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த கிப்சும்.
ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது அசாத்தியமான ஒன்றாக கருதப்பட்டது. அதை ஒரு தடவை நிகழ்த்தியது மட்டுமில்லாமல் தன்னுடைய திறமையால் இந்திய அணியைச் சேர்ந்த ரோகித் சர்மா இரண்டு முறை இரட்டை சதங்கள் அடித்து அசத்தினார்.
அதே போன்று அவுஸ்திரேலியா உள்ளூர் போட்டியில் மேகே பந்து வீச்சில் 1 பந்துக்கு 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் 1 பந்துக்கு 21 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. அதே போன்று நியூசிலாந்து நாட்டில் நடந்த உள்ளூர் டி20 போட்டியில் 1 பந்துக்கு 18 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ரானாநவீத் பந்துவீச்சில் ஒரு பந்துக்கு 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இதே போன்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1 பந்துக்கு 12 ஓட்டங்கள் குவித்தார். இதே போன்று மேற்கிந்திய தீவில் நடைபெற்ற உள்ளூர் டி 20 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரர் சங்ககாரா 2 பந்துகளுக்கு 11 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.