ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரித்தானியா 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. பல ஆண்டுகள் நீடித்த இந்த உறவின் முடிவு தற்போது ஆரம்பமாகிறது.
2013 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டேவிட் கேமரூன், ஒரு உறுதி மொழி அளித்தார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறலாமா அல்லது இருக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் தான் இந்த உறவு குறித்த விவாதம் முடிவுக்கு வரும் என்றும் பிரித்தானிய மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறினார்.
இந்த முடிவிற்கு ஒரு சில கட்சித்தலைவர்கள் ஆதரவு அளித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜுன் மாதம் வாக்களர்கள் தங்கள் முடிவை அறிவித்தனர். அதில் ஏராளமானோர் பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனால் ஒரு சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்.ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதற்கு அடித்தளம் போட்ட பிரதமர் டேவிட் கேமரூன் திடீரென்று தனது பதவியில் இருந்து விலகினார்.
நாடு புதிய பாதையில் செல்லும் போது, புதிய தலைவர் தான் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் புதிய பிரதமராக வந்த தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறுவது குறித்து, வாக்களர்களின் கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
தற்போது அதற்கான வேலைகளிலும் பிரித்தானியா செயல்பட்டு வருகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரித்தானியா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது முன்னுதாரணமற்ற முடிவு, சிக்கலானது, நிச்சயமற்றது, சவாலானது, வாய்ப்புகளை உருவாக்கவல்லது என்று கூறப்படுகிறது.