4-வயது சிறுமிக்கு அம்பர் எச்சரிக்கை!
கனடா-வன்கூவரை சேர்ந்த நான்கு வயது சிறுமி டெலிலா வெல்ரன் காணாமல் போய்விட்டதால் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தின் சந்தேக நபர் இவளது தாயாராக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
டெலிலா கடைசியாக காணும் போது வண்ணமயமான மழை கோட்டும்- அதிக சிவப்பு நிற பூக்கள் கொண்ட- முன் பக்கத்தில் எழுத்துக்கள் கொண்ட கறுப்பு பாவாடை மற்றும் கிரே நிற இறுக்கமான காலணியும் அணிந்திருந்தாள்.
கௌகேசிய தோற்றம், நான்கு அடி உயரம், 40இறாத்தல் எடை மற்றும் சிவப்பு முடி நீல கண்கள் கொண்டவள் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
டெலிலா வன்கூவர் East King Edward பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் என கருதப்படும் இவளது தாய் 46வயது, 5.6உயரம், 139இறாத்தல் எடை, சிவப்பு தலை முடி மற்றும் நீல கண்கள் கொண்ட தோற்றமுடையவர்.
கடைசியாக காணப்பட்ட போது மெல்லிய பிறவுன் தடித்த இளைகள் கொண்ட பருத்தி jacket, கடும் நிற காற்சட்டை, அரை உயர மழை சப்பாத்து அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.
சிறுமியை அல்லது தாயை கண்டவர்கள் 911 ஐ அழைக்குமாறும் இருவரில் எவரையும் அணுக வேண்டாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.