3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை இன்று (08) தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக மேலும் 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.